Tag Archives: குடல்

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

குடல் குழம்பு

தேவையான பொருட்கள்:-
குடல் – 1 சிறிதாக நறுக்கவும்
சின்ன வெங்காயம் – 20
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு – 5 பல்
தேங்காய் – 1/4 மூடி
மிளகு, சோம்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
புளி – சிறிய எலுமிச்சையளவு.

செய்முறை:-
தேங்காய், பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் காய வைத்து, அதில் மிளகு, சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி பின் குடல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, அரைத்த விழுது போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

குடல் கூட்டு

தேவையான பொருட்கள்:
குடல் – 1 முழுவதும்
கடலைப்பருப்பு – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி – 2
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 1
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தேங்காய் – கால் மூடி (துருவியது)
செய்முறை:
குடலைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் நறுக்கிய குடல், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடி 5 விசில் விடவும். வெந்த பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து கறிவேப்பிலை போட்டு வெந்த குடல் கூட்டில் தாளித்ததை ஊற்றி தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.