Tag Archives: kuzhambu

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

முட்டைக் குழம்பு

தேவை:
முட்டை – 4
தேங்காய் பால் – 3 டம்ளர்
ப.மிளகாய் – 4
வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும். இக்கலவையை நன்கு கொதிக்க விடவும். இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீதமுள்ள தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.

நெத்திலி மீன் குழம்பு

தேவை:
நெத்திலி மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 4
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு
பூண்டு – 7 பல்
தேங்காய் பால் – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 சிறிதளவு
எண்ணெய் – தேவையானது
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை:
மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். புளியை கரைத்து ஊற்றவும். இதில் மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.