Tag Archives: recipe

ராகி கூழ்

ராகி கூழ்
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவு, உப்பு, தண்ணீர் மூன்றையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இதை ஊற்றி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். கூழ் வெந்ததும் இறக்கி, பருப்புத் துவையல், மோருடன் சேர்த்து சாப்பிடவும்.

ஓட்ஸ் கட்லெட்

ஓட்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
குடமிளகாய் – பாதி
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
ஃப்ரெட் தூள் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
பட்டை, கிராம்பை தூள் செய்து கொள்ளவும். ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், கொத்தமல்லி முதலிய அனைத்தையும் பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் பட்டை, கிராம்புத்தூள் சேர்த்து, உப்பு போட்டு வறுத்த ஓட்ஸையும் சேர்த்து, பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, எல்லாவற்றையும் ஒன்றாக, நன்றாகக் கலந்து இறக்கவும். மைதா மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். கட்லெட் கலவை ஆறியவுடன் கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். பின்னர் இந்த கட்லெட்டுகளை மைதா மாவில் தோய்த்து எடுத்து ஃப்ரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கொண்டைக் கடலை குழம்பு


தேவையான பொருட்கள்:-
கொண்டைக்கடலை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
பூண்டு – 2 அல்லது 3 பல்
சோம்பு, மிளகு – சிறிது
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
குழம்பு பொடி – 3 (அ) 4 ஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:-

கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து சோம்பு, மிளகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையில் போட வேண்டும்.  குழம்பு பொடி,   பொடி செய்த துவரம் பருப்பு சீரகப் பொடியைப் போட்டு  நன்கு கொதித்தவுடன்  இறக்க வேண்டும்.