Tag Archives: Weight Loss

ராகி கூழ்

ராகி கூழ்
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவு, உப்பு, தண்ணீர் மூன்றையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இதை ஊற்றி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். கூழ் வெந்ததும் இறக்கி, பருப்புத் துவையல், மோருடன் சேர்த்து சாப்பிடவும்.

கம்பு தோசை

கம்பு தோசை
 
தேவையான பொருட்கள்
 
கம்பு – 1 கப்
உளுந்து – 1/4 கப்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிது
 
செய்முறை
 
கம்பையும், உளுந்தையும் நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் கம்பு, உளுந்து, கொத்தமல்லி விதை, சீரகம், உப்பு முதலியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து அரைத்து தோசைகளாக சுட்டு எடுக்கவும். தேங்காய்த் துவையலுடன் பரிமாறவும்.
 
 

Ragi Puttu Recipe in Tamil | ராகி புட்டு

Ragi puttu is a finger millet steamed cake made from ragi flour and grated coconut. It is a popular breakfast dish in South India and is known for its delicious taste and numerous health benefits.

Ragi, is a highly nutritious millet grain. It is a good source of protein, fiber, calcium, iron, and other essential vitamins and minerals.

Ragi puttu improves digestion, promotes weight loss, strengthens bones and teeth, boosts immunity and Improves heart health.

Ragi Puttu

Ingredients:

Ragi flour – 2 cups
Salt – 1 pinch
Ghee – 2 tbsp
Coconut grated – 1 cup
Sugar – as required

Method:

Add salt to the Ragi flour and sprinkle water little by little and make it into a fine powder without lumps and sift it in a sieve. Then steam this batter in idli pot or steamer plate and take it. Mix ghee, grated coconut and sugar while it is still hot and serve.

Recipe in Tamil

ராகி புட்டு

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 கப்
சீனி – தேவையான அளவு

செய்முறை

கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பொல பொலவென்று கட்டிகள் இல்லாமல் பிசறி சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சூடாக இருக்கும் பொழுதே நெய், தேங்காய்த்துருவல், சீனி சேர்த்து பிசறி பரிமாறவும்.