Category Archives: Snacks

This Category comprises of Chettinad Snacks Dishes and Recipes

வெந்தைய குழம்புதேவை:உளுந்தம் பருப்பு – 1 1/2 கிலோகடுகு – 1 டீஸ்பூன்சாம்பார் பொடி – 60 கிராம்பச்சை மிளகாய் – 6 கிராம்உப்பு – தேவைக்கேற்றவைதுவரம் பருப்பு – 150 கிராம்கடலைப்பருப்பு – 1 1/2 டீஸ்பூன்புளி – 40 கிராம்வெந்தையம் – 80 கிராம்
செய்முறை: புளியை ஒரு பாத்திரத்தில் 125 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக பிசைந்து சக்கையை நீக்கி விட்டு கரைத்த புளிச் சாற்றில் சாம்பார் பொடியை போட்டு நன்றாக கலக்க வேண்டும். 400 மி.லி. தண்ணீர் ஊற்றி வெந்தையம் பருப்பை சுத்தம் செய்து அடுப்பில் வைத்து நன்றாக வேக விடவும். வெந்த பின் ஒரு தனிப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். வாணலியில் தேவைக்கேற்ற நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை வதக்கவும். புளிச்சாற்றை கொதிக்க வைக்கவும் பின் பருப்பு வெந்தையம் போட்டு மீண்டும் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் கடுகு உளுந்தம் பருப்பை கருவேப்பிலையை உருவிப் போட்டு கடுகு பொறிந்ததும், தாளித்துப் போட்டு இறக்கவும்.
மல் பூரிதேவை:மைதா மாவு – 2 கப்அரிசி மாவு – 1/4 கப்சோடா உப்பு – 1 சிட்டிகைகேசரிப்பவுடர் – 1/2 தேக்கரண்டிதயிர் – 1 கப்சீனி – 2 1/2 கப்சுடுவதற்கு டால்டா அல்லது எண்ணெய்
செய்முறை: இரண்டு மாவுகளையும் கலந்து தயிர் சேர்த்து பணியார மாவு போல் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். சீனியில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கேசரி பவுடர் சேர்த்து, பாகு கம்பிப் பதமாக தயாரித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஊற்றி வெந்ததும் எடுத்துச் சீனிப்பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும்.
சுண்டைக்காய், மணத்தக்காளி குழம்புசெய்முறை: வெந்தயக்குழம்பு மாதிரியே தயார் செய்ய வேண்டும் குழம்பு தாளிதம் செய்யும் போது எண்ணெயில் சுண்ட வற்றலை அல்லது மணத்தக்காளியை பொரித்துக் கொண்டு புளி கலந்த மசாலாவை சேர்க்க வேண்டும்.
முருங்கைக் காம்பு சூப்தேவை:முருங்கைக் காம்பு – 100 கிராம்தக்காளி – 1பெரிய வெங்காயம் – 1மிளகு – 6உப்பு – தேவையானதுஇலவங்கபட்டை இலை – சிறிதளவுமஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் – தாளிக்கபச்சை மிளகாய் – 1துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 50 கிராம்
செய்முறை: முருங்கைக் காம்பை மூன்று அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, இலவங்க பட்டை இலை, மிளகு, வெங்காயம், தக்காளி, முருங்கைக் காம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி மூன்று டம்ளர் தண்ணீ ஊற்றி வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, பருப்பு சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்தவுடன் இறக்கவும். சூப் தயார். (தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்).
மசாலா உருளைக்கிழங்குசெய்முறை: 1/4 கிலோ உருளைக்கிழங்கை அதிகம் குறையாமல் வேக வைத்து உரித்து சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வற்றல் 4, கொத்தமல்லி 2 தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு 10 சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் சில் 4, பால் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் 5 கருவேப்பிலை போட்டு வதக்கி சிவந்ததும் தேங்காய்ப்பாலில் அரைத்த விழுதை கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் மசால் வாசனை போகும் வரை கொதிக்க வைத்து உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். அதிகம் கெட்டியாகாமல் புரட்டினாற் போல் எண்ணெய் தெளிய இருக்க வேண்டும்.
பாகற்காய் வதக்கல்செய்முறை: பாகற்காயை வட்டமாக வெட்டி அரைத்த மசால், உப்புப் போட்டு அதிகம் எண்ணெய் சேர்த்து சிவக்க வதக்கவும். 1 தேக்கரண்டி சீனி சேர்த்து வதக்கினால் மொறுமொறுப்பாக இருக்கும்.குறிப்பு: உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து தண்ணீரை வடித்துவிட்டு வதக்கினால் அதிக கசப்பு இருக்காது.

ஆப்பம்

தேவை:ப

ச்சரிசி – 500 கிராம்
சோடா உப்பு, உப்பு – சிறிதளவு
தேங்காய் – 1 மூடி பால் எடுக்கவும்
புழுங்கல் அரிசி – 500 கிராம்
ஏலம் பொடி – சிறிதளவு

செய்முறை:

அரிசியை நன்றாக ஊற வைத்து நன்றாக ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும் முன் சிறிது உப்பு சோடா உப்பு, கலந்து வைக்கவும். காலையில் ஆப்பசட்டியில் சுடவும். தேங்காய் பாலில் சிறிது ஏலம் பொடி சேர்த்துக் கொள்ளவும். ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி

செய்முறை:

பொதுவாக கோதுமை மாவில் சப்பாத்தி செய்யலாம். மைதாவிலும் சப்பாத்தி மாவு பிசைவதற்கு பெரும்பாலும் தண்ணீரே உபயோகப்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அல்லது பால் உபயோகிக்கலாம். சப்பாத்தி மெதுவாக இருக்கும். மாவில் வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிது சேர்த்துப் பிசையலாம். சப்பாத்தி மாவையும் பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து சுட்டால் மெதுவாக இருக்கும். சப்பாத்தி மாவைச்சலித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் மூடித் தனியே வைக்கவும். சப்பாத்திகளைச் சற்று திண்ணமாக இடவும். சப்பாத்திகளை தோசைச் சட்டியில் போடவும். இருபக்கமும் சற்று உலர்ந்த மாதிரி வந்த பின் 1/4 தேக்கரண்டி நெய்யை சுற்றி விட்டால் சப்பாத்தி பந்து போல் எழும்பி வரும். இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சப்பாத்திக்கு சிறு தீ தான் இருக்க வேண்டும்.