மீன் பஜ்ஜி

தேவை:

பெரிய மீன் – 5 எண்ணம்
எண்ணெய் – 200 கிராம்
காக் பஜ்ஜி மாவு – 200 கிராம் பாக்கெட்
கறிமசால் பொடி – சிறிதளவு
உப்பு, பூண்டு – சிறிதளவு

செய்முறை:

மீன்களை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவுடன், பூண்டு சிறிது உப்பு, கறிமசால் பொடி சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்கு சூடானதும் மீனை எடுத்து ஏற்கனவே கரைத்து வைத்த பஜ்ஜிமாவில் தேய்த்து எண்ணெய்யில் பொரித்து இருபக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். மீன் பஜ்ஜி ரெடி. மிகவும் சுவையாக இருக்கும்.

ரொட்டி

தேவை:

மைதா மாவு – 1 கிலோ
சீனி – 200 கிராம்
உப்பு – 10 கிராம்
டால்டா – 50 கிராம்
ஈஸ்ட் தேக்கரண்டி (டிரை ஈஸ்ட் என்று கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது).

செய்முறை:

ஈஸ்ட்டை வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி சீனி கலந்து புளிக்க வைக்கவும். 10 நிமிடத்தில் மேல் பாகத்தில் நுரைத்து வரும். இந்த ஈஸ்ட்டை 1/4 கிலோ மைதாவில் கலக்கவும். நன்கு ஒன்று சேரக் கலந்தவுடன், தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து ஈரத்துணியால் மூடி எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். இந்தப் புளிக்க வைத்த மாவை மேலே கூறிய 3/4 கிலோ மைதா, சீனி, உப்பு, டால்டா, முட்டை இவற்றுடன் சேர்த்துப் பிசையவும். மேலும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து வைக்கவும். பூரி, சப்பாத்தி மாவு போன்று இருக்கும் 30 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். பின் ரொட்டி வேக வைக்கும் டப்பாவில் சிறிது நெய் அல்லது டால்டா தடவி, பிசைந்த மாவை டப்பாக்களில் வைக்கவும். மற்றுமொரு நிமிடங்களில் ரொட்டி டப்பாவில், மாவு பாதி எழும்பியவுடன் ரொட்டி கடும் அடுப்பில் வைத்துச் சுடவும்.

சுறா மீன் புட்டு

தேவை:

பால் சுறா மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க

செய்முறை:

மீனை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோல், எலும்பு நீக்கி தூள் செய்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். ப.மிளகாயை இதில் சேர்த்து வதக்கவும். தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.