ஃபிங்கர் ஃபிஷ்தேவை:வஞ்சர மீன் – 1/2 கிலோ (முள், தோல் நீக்கி விரல் சைஸ்க்கு வெட்டி வாங்கவும்)இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2  டீஸ்பூன்சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்முட்டை – 2எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்எண்ணெய் – பொரிக்கஉப்பு – தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.
மூளை வறுவல்தேவை:மூளை – 2சின்ன வெங்காயம் – 50 கிராம்சீரகம் – 1/2 தேக்கரண்டிமிளகு தூள் – 1 தேக்கரண்டிமல்லித்தூள் – 2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவு
செய்முறை: 2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 8 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் இவற்றைப்போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்த பின், மூளைத்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்.
புலாவ் கொத்துக்கறிதேவை:பிரியாணி அரிசி – 500 கிராம்ஆட்டுக்கறி – 500 கிராம்மிளகாய்பொடி – சிறிதளவுகரம் மசாலாபொடி – சிறிதளவுநெய் – 50 கிராம்ஆட்டுக்கறி – 2இஞ்சி, பூண்டு – 50 கிராம்சீரகப்பொடி – சிறிதளவுஏலம், கிராம், பட்டை – சிறிதளவுதக்காளி – 4 எண்ணம்
செய்முறை: நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியை வைத்து 1 க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகப்பொடி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்ப்பொடி, தக்காளி போட்டு வதக்கி கொத்தாக நறுக்கிய கறியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு புலாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். மனத்துடன் புலாவ் கொத்துக்கறி ரெடியாகி விடும். சுவையாக இருக்கும்.
செர்ரி கேக்தேவை:வெண்ணெய் – 100 கிராம்சீனி – 100 கிராம்பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிசெர்ரி – 150பால் – 2 மேஜைக்கரண்டிமைதா – 200 கிராம்முட்டை – 2கொஞ்சம் பொடியாக நறுக்கிய எலுமிச்சம்பழத் தோல்
செய்முறை: மாவையும், பேக்கிங் பவுடரையும் சலிக்கவும். வெண்ணெய், சீனி, எலுமிச்சம்பழத் தோல் சேர்த்துக் கடையவும். இதனுடன் கடைந்த முட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மூன்றில் ஒரு பங்கு மாவை இக்கலவையுடன் சேர்க்கவும்.
கோழிக் குழம்புதேவை:கோழி – 1/2 கிலோமிளகுத்தூள் – 1/2 கரண்டிசீரகத்தூள் – 2 கரண்டிதேங்காய் – 1/2 முடி பால்வெங்காயம் – 50 கிராம்மிளகாய்தூள் – 50 கிராம்மல்லித்தூள் – 2 கரண்டிஉப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவுநல்லெண்ணெய் – 100 கிராம்
செய்முறை: கோழியை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி கோழிக்கறி போட்டு வதக்கி, தேவையான உப்பு, மஞ்சள்தூள் சிறிது நேரம் மூடி வைக்கவும். கோழிக்கறியை சிறிது நீரில் வேகவிடவும். பின் மசாலாவையும், தேங்காய்பாலையும் கறியில் ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும். கறிவெந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கி விடவும்.
கோழி சாப்ஸ்தேவை:கோழி – 1 கிலோபச்சை மிளகாய் – 10இஞ்சி – 2 அங்குலம்பெரிய மிளகாய் – 1முட்டை – 3உப்பு தேவையான அளவு
செய்முறை: 1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சை மிளகாய்கள் 1 பெரிய வெங்காயம், இவற்றை அரைத்துக் கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்கரின் மூடியையும் மூடவும். வெயிட் வைக்கவும் விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். குக்கர் திறந்து வந்த பின், கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்துக் கொள்ளவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு, நுரைக்க அடித்துக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 100 கிராம் ஊற்றி காய்ந்ததும், தீயை மிதமாக்கவும். கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தடவைக்கு 6 துண்டுகள் வீதம் போட்டு பொறிக்கலாம்.
இறால் மீன் குழம்புதேவை:இறால் – 1/2 கிலோதேங்காய் பால் – 1/4 கப்இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – 2தக்காளி – 2மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்முந்திரி பருப்பு தூள் – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – 1 கொத்துஎண்ணெய் – தேவையானதுஉப்பு – தேவையான அளவு
செய்முறை: இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தக்காளி, மசாலா தூள்கள், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் விட்டு வேக விடவும். பின்பு அதனுடன் வேக வைத்த இறாலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Advertisements

கறி சாப்ஸ்தேவை:சாப்ஸ் கறி – 1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி வற்றல்கொத்தமல்லி – 1 மேஜைக்கரண்டிகசகசா – 1 தேக்கரண்டிசீரகம் – 1 மேஜைக்கரண்டிசின்ன வெங்காயம் – 8 (வெட்டியது)தேங்காய் – 1 முடிஇஞ்சி – சிறியதுபூண்டு – 4 பல்முந்திரிப்பருப்பு – 15உப்பு, மஞ்சள்
செய்முறை: பாதி தேங்காயில் பால் எடுக்கவும். மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு, உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு 9 பட்டை சிறிது கிராம்பு 3 ஏலக்காய் 3 போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
சுட்ட கறிதேவை:தொடை கறி – 200 கிராம்மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்வினிகர் – 1 ஸ்பூன்மிளகுத்தூள் – 2 ஸ்பூன்எண்ணெய் – 2 ஸ்பூன்உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை: ஆட்டின் முன் தொடைகறியை வாங்க சம அளவுக்குள் துண்டுகள் வெட்டி சுத்தம் செய்து கழுவி வைக்கவும. உப்பு, மிளகுத்தூள், வினிகர், எண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும். கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்தி கட்டையால் தட்டி சதுரமாக பரத்தவும். கறித்துண்டுகளை எடுத்து மிளகு கலவையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். தோசைக் கல்லை காய வைத்து (எண்ணை விட வேண்டியதில்லை) ஊறிய கறிதுண்டுகளை மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் பொன் வறுவலாக எடுக்கவும்.
இரத்தம் வதக்கல்தேவை:ஆட்டின் இரத்தம் – 200 கிராம்எண்ணெய் – 2 தேக்கரண்டிபச்சை மிளகர் – 6மஞ்சள்தூள் – 1 சிட்டிகைதேங்காய் – 1/2 முடிவெங்காயம் – 50 கிராம்கறிவேப்பிலை – சிறிதுஉப்பு – தேவையானது
செய்முறை: இரத்தம் உறைந்து இருக்கும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். (பிசைந்தும் சிறு சிறு உருண்டைத் துண்டுகளாக இருக்கும்) பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும் இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும். சீக்கிரம் வெந்து விடும். இறக்கும் போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும். இரத்தம் நிறம் மாறி இருக்கும் உளுந்தம் சுண்டல் மாதிரி இருக்கும் இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தனியாகவும் சுண்டல் மாதிரி சாப்பிடலாம்.
கோழி ரோஸ்ட்தேவை:கோழி – 1/2 கிலோஇஞ்சி பூண்டு உப்பு – சிறிதளவுதேங்காய் எண்ணெய் – 50 கிராம்எலுமிச்சம்பழம் – 1மிளகாய்தூள் – 1 கரண்டிசிவப்பு கலர் பவுடர் – சிறிதளவுதயிர் – 2 டீஸ்பூன்நெய் – 50 கிராம்
செய்முறை: தோல் நீக்கிய கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தயிரில் கோழித்துண்டு, தட்டிய பூண்டு இஞ்சி, கலர் பவுடர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் போட்டு எண்ணெய் மிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் குக்கரில் லேசாக வேக வைக்கவும். கோழித்துண்டுகளை தனியே எடுத்து சாறை வற்ற வைக்கவும். வெந்த கோழித் துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான கோழி ரோஸ்ட் ரெடி.
கோழி சூப்தேவை:கோழி – 1 கிலோபெரிய வெங்காயம் – 2இஞ்சி – 1 அங்குலம்மிளகு தூள் – 2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவு
செய்முறை: 1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி நறுக்கிக் கொள்ளவும். 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, வெங்காயம் 2 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும். மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும். ப்ரஷர் குக்கரில் தயாரிப்பதனால் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி விசில் சப்தம் கேட்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
முட்டை ஆம்லெட்தேவை:முட்டை – 4சிறிய வெங்காயம் – 50 கிராம்பச்சை மிளகாய் – 4உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுமஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்மிளகு, சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்
செய்முறை: முட்டைகளை உடைத்து அடித்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் ப. மிளகாய் இவற்றை அம்மியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அடித்து வைத்துள்ள முட்டையில் மஞ்சள், மிளகு, சீரகதூள், வெங்காயம். ப. மிளகாய் விழுது உப்பு முதலியவற்றை நன்றாக கலந்து தோசை கல்லில் சிறுசிறு தோசைகளாக ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். சூடாக பரிமாறவும்.
எலும்புச் சாம்பார்தேவை:நெஞ்சு எலும்பு – 200 கிராம்வெங்காயம் – சிறிதளவுபூண்டு – 6மஞ்சள்தூள் – 1 சிட்டிகைதுவரம் பருப்பு – 100 கிராம்பச்சை மிளகாய் – 6சாம்பார் பொடி – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
செய்முறை: எலும்பை வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை வேக வைத்துக் கடைந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) பூண்டு நறுக்கியது. சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும், விரும்பினால் 2 கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் கொதிக்க வைக்கலாம். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
மட்டன் குழம்புதேவை:மட்டன் – 500 கிராம்வெங்காயம் – 50 கிராம்கொத்தமல்லிதூள் – 1 கரண்டிஉப்பு மஞ்சள்தூள் – சிறிதளவுநல்லெண்ணெய் – 100 கிராம்சீரகத்தூள் – 1 கரண்டிமிளகாய் – 5
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறி, சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேக வைத்து இறக்கவும். குழம்பு எண்ணெய் தெளிந்து கெட்டியாக பிரட்டினாற் போல் வைக்கவும்.

சிங்கி ரால்தேவை:சிங்கி ரால் – 1/4 கிலோவற்றல் தூள் – 2 தேக்கரண்டிஉப்பு, மஞ்சள் – தாளிக்க எண்ணெய்சீரகம் – 1 தேக்கரண்டிமுருங்கை இலை – சிறிது
செய்முறை: சிங்கிராலை சுடு நீரில் போட்டு வைத்து மேல் தோட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுக்கவும். புட்டு மாதிரி உதிர்த்து வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தன் தண்ணீரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும். சிங்கிராலையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
பழ கேக்தேவை:காய்ந்த திராஷைப் பழம் – 1 1/2 கப்கொட்டை எடுத்த பேரீச்சம்பழம் – 1 1/2 கப்பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்முந்திரிப்பருப்பு – 1/2 கப்ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிவெனிலா எஸ்ஸென்ஸ் – 10 சொட்டுவெண்ணெய் – 1 1/2 கப்சர்க்கரை – 1 1/2 கப்முட்டை – 4மைதா – 3/4 கப்தேன் – 1/2 கப்
செய்முறை: பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பைச் சிறிது பன்னீர் விட்டு அரைக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்துக் கொள்ளவும். சீனியையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பையும் தேனையும் கலந்து அடிக்கவும். கடைசியில் வெள்ளைக்கருவை கலக்கவும். மாவு கலந்த பிறகு அதிகமாகக் கடையக் கூடாது. மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றையும் எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து, வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்.
புறா சாப்ஸ்தேவை:புறா – 2சீரகம் – 1 தேக்கரண்டிமிளகு – 2 தேக்கரண்டிதேங்காய் – 1 சில்மிளகாய் வற்றல் – 4மல்லி – 1 தேக்கரண்டி
செய்முறை: இரு புறாக்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 4, சீரகம் 1 தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, மிளகு 2 தேக்கரண்டி, தேங்காய் 1 சில், வெங்காயம் 10 இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலாவைக் கறியுடன் போட்டு தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறியை அதில் போட்டு 1/8 படி தண்ணீர் ஊற்றி லேசான நெருப்பில் வேக வைக்கவும். கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின் சிறிது கொத்தமல்லி இலை நறுக்கிப்போட்டு சிவக்க வதக்கி எடுக்கவும்.
வறுத்த நண்டுதேவை:நண்டு – 5இஞ்சி – 1 அங்குலம்சின்ன வெங்காயம் – 50 கிராம்மல்லி (தனியா) – 2 தேக்கரண்டிதக்காளி – 1சிகப்பு மிளகாய் – 10சீரகம் – 1 தேக்கரண்டிபூண்டு – 5 பல்பெரிய வெங்காயம் – 3
செய்முறை: நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.
கறிக்கோலா உருண்டை குழம்புதேவை:கொத்துக்கறி – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்பெருஞ்சீரகம் – 3 தேக்கரண்டிசீரகம் – 3 தேக்கரண்டிபொட்டுக்கடலை – 50 கிராம்பச்சை மிளகாய் – 5மிளகாய் வற்றல் – 15தேங்காய் – 1 முடிமுட்டை – 2பெரிய வெங்காயம் – 3பூண்டு – 50 கிராம்கசகசா – 2 தேக்கரண்டி
செய்முறை: 1/2 கிலோ கொத்துக்கறியை சுத்தம் செய்து தண்ணீர் வற்றும் படியாக வதக்கி, இறக்கிக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயம், 100 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் பூண்டு, 3 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 3 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் பொட்டுக்கடலை இவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக வதக்கவும். வதங்கிய பின் ஆற விடவும். ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். கசகசா 2 தேக்கரண்டி, 5 பச்சை மிளகாய், 15 மிளகாய் வற்றல், தேங்காய் 1 முடி துருவியது ஆகியவற்றைத் தனியாக வதக்கி, ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, முட்டை அடிக்கும் கருவினால் நன்கு அடித்துக் கொள்ளவும். மஞ்சள் கரு ஒன்றினை எடுத்து முட்டை தனியே வைத்துக் கொள்ளவும். வதக்கிய கொத்துக்கறியை உரலில் போட்டு தேவையான உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும். ஆட்டிய கறியுடன் அரைத்த மசாலாக்கள் சிறிது மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள மஞ்சள் கரு ஆகியவற்றைக் கலந்து, பிசைந்து உருண்டைகளாக தயாரித்துக் கொள்ளவும். வாணலியில் 300 கிராம் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். (குழம்பு தயாரிப்பதனால் உருண்டைகளைப் பொரிக்காமல் தயாரித்துக் கொள்ளவும்.)
கொடிக்கறிக் குழம்புசெய்முறை: கொடிக்கறியை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் கொடிக்கறியை கறியும் காய்கறியும் சேர்த்து வைக்கும் குழம்புகள் மாதிரியே, தனியாகவோ காய்கறிகள் சேர்த்தோ குழம்பு செய்யலாம்.

சீஸ் சாஸ்செய்முறை: வெண்ணெயை இளக்கி, அதில் மாவு சேர்க்கவும். சிவக்கும் முன்னர் சாஸை ஊற்றி கெட்டியாகும் படி கிளறவும். மஞ்சள் கருவையும் கலந்து கொள்ளவும். சீஸ் மிளகு, உப்பு சேர்த்துக் கலந்து இறுதியில் நன்கு அடித்த முட்டை வெள்ளைக் கருவையும் சேர்க்கவும்.
மட்டன் கோலா குழம்புதேவை:மட்டன் – 1/2 கிலோ (கொத்தியது)சின்ன வெங்காயம் – 25 கிராம்பூண்டு – 25 கிராம்தேங்காய் – 1/4 மூடிமிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்இஞ்சி – 1 துண்டுஉப்பு – தேவையானதுஎண்ணெய் – பொரிக்க
செய்முறை: மேற்கண்ட பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைஸாக அரைத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.
மசாலா குழம்பு செய்ய தேவையானவை:தேங்காய் – 1/4 முடிசோம்பு – 1 டீஸ்பூன்பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்கசகசா – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன் மேற்கண்ட பொருட்களை நைஸாக அரைத்து வைக்கவும். இப்பொழுது வாணலியில் 25 கிராம் எண்ணெய் ஊற்றி, தலா 1 டீஸ்பூனு பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு வதக்கி 100 கிராம் பெ. வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கவும். பொன் நிறத்தில் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும் பின் 50 கிராம் தக்காளியைச் சேர்த்து கிளறவும். சுண்டைக்காய் சைஸ் புளியை கரைத்து ஊற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். குழம்பு 10 நிமிடம் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

ஃபிஸ் பய்தேவை:மீன் – 8 அவுன்ஸ் (60 கிராம்)முட்டை – 2 அவித்ததுதுருவிய சீஸ் – 1 மேஜைக்கரண்டிசீஸ்சாஸ் – 1 கப்உப்பு, மிளகுத்தூள் பார்சிலி இலை
செய்முறை: மீனை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு உடனே எடுக்கவும். மீன் புட்டு மாதிரி உதிர்க்க வரும். உதிர்த்த மீனில் எலுமிச்சம்பழச்சாறு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். கேக் பாத்திரத்தில் ஒரு அடுக்கு முட்டை, ஒரு அடுக்கு மீன் என்று அடுக்கவும். துருவிய சீஸைத் தூவவும். சீஸ்சாஸை ஊற்றி, சாஸ் கேக் பாத்திரத்தில் கீழ்பாகம் வரை இறங்கும் படி வைத்திருந்து கேக் அடுப்பில் வேக வைக்கவும்.
சிக்கன் சில்லி பிரைய்தேவை:கோழி – 1 கிலோவற்றல் – 6 அல்லது 7 (விதை நீக்கியது)பெல்லாரி – 1/2 கிலோதக்காளிப்பழம் – 3டால்டா அல்லது நெய் – 3/4 கப்பூண்டு – 1வினிகர் – 1உப்பு, மஞ்சள் தூள்
செய்முறை: கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வற்றல், பூண்டை வினிகர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். கறியுடன் உப்பு, மஞ்சள் தூள் அரைத்த விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கறியை இட்லித் தட்டில் ஆவியில் நன்றாக வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக வெட்டி நெய்யில் போட்டு பிரௌன் கலராக பொரித்து எடுத்து வைக்கவும். பின் கறியை நெய்யில் பிரௌன் கலர் ஆகும் வரை பொரிக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம் தகடாக வெட்டிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து பரிமாறவும்.
சிலோன் சிக்கன் பிரைய்தேவை:தோல் உரித்த கோழி – 1 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டவும்)வற்றல் – 8மிளகு – 1 டீஸ்பூன்ரீபைண்ட் ஆயில் – 5 கரண்டிசீரகம் – 1 டேபிள் ஸ்பூன்மல்லி – 2 டேபிள் ஸ்பூன்பூண்டு – 2 பல்வெங்காயம் – 1/4 கிலோஇஞ்சி – 1 துண்டுதக்காளி – 4முட்டை – 4
செய்முறை: மசாலாப் பொருட்களை அரைத்து கோழித்துண்டுகளில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், தக்காளி போட்டு வேக வைக்கவும். வெந்த பின் நீர் இல்லாமல் வற்ற வைக்கவும். பின் ஆற வைத்து கோழித்துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் போட்டு வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் வதக்கவும். முட்டைகளை உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து கோழி வறுவலுடன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
வெல்லக் கேக்தேவை:ரவை – 500 கிராம்முட்டை – 6துருவிய வெல்லம் – 500 கிராம்கெட்டியான தேங்காய்ப்பால் – 2 கப்சீனி – 250 கிராம்பன்னீர் – 3 தேக்கரண்டிவெண்ணெய் – 250 கிராம்முந்திரிப் பருப்பு – 250 கிராம்
செய்முறை: பாதி முந்திரிப்பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். மற்ற பாதியை நைய நறுங்கத் தட்டிக் கொள்ளவும். ரவையை வறுத்து அது சூடாக இருக்கும் போதே வெண்ணெயைக் கலந்து தனியே வைக்கவும். முட்டை மஞ்சள் கருவையும் சீனியையும் நன்கு அடித்து ரவைக்கலவையில் வெல்லம் சேர்த்துக் கலக்கவும். பருப்பு, எசன்ஸ் கலக்கவும். வெள்ளைக் கருவை நன்கு நுரை பொங்க அடித்துக் கேக், மாவுடன் கலக்கவும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து நெய் தடவிய கேக் பாத்திரத்தில் ஊற்ற வேக வைக்கவும்.
மட்டன் தன்சக்தேவை:கறி – 1/2 கிலோது. பருப்பு – 1/2 கப்கலந்த பருப்பு – 1/2 கப் (கடலை, பயத்தம் பருப்பு)உருளைக்கிழங்கு – 1கத்தரிக்காய் – 1பெ.வெங்காயம் – 2வெந்தயக்கீரை – 1 கட்டுபரங்கிக்காய் துண்டு – 1பூசணிக்காய் – 1புளி – எலுமிச்சை அளவுதக்காளி – 2மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் – தேவையானதுஉப்பு – தேவையான அளவுமசாலா குழம்பு செய்ய தேவையானவை:வெந்தயம் – 1/2 டீஸ்பூன்மிளகு – 1/2 டீஸ்பூன்மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்சீரகம், தனியா பொடி – 2 டீஸ்பூன்இஞ்சி – 1 சிறியதுண்டுபூண்டு – 10 பல்இலவங்கப் பட்டை – 1 சிறிய துண்டுகொத்த மல்லி தழை – 1 சிறிய கட்டு
செய்முறை: மட்டனை கழுவி சிறிய துண்டுகளாகச் செய்து கொள்ளவும். காய்களைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, வெந்தயக்கீரை இவற்றை நறுக்கிக் கொள்ளவும். பருப்புகளைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இவற்றை குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளித்தண்ணீர் பயன்படுத்தி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். இவற்றுடன் வேக வைத்த கறி, பருப்பு, காய் கலவையை சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பின்பு இந்த கலவையை நன்றாக மசிக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்தேவைமசித்த உருளைக்கிழங்கு – 2 கப்அரிசி மாவு – 4 கப்மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்கரம் மசாலாத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைஉருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.இதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.இந்த மாவை உருட்டி விரல் நீள துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், இந்த துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
ரிப்பன் பக்கோடாதேவைஅரிசி மாவு – 3 கப்கடலை மாவு – 1 கப்அரைத்த பூண்டு, காய்ந்த மிளகாய் – விழுது டேபிள் ஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைஅரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள பூண்டு, மிளகாய் விழுதைச் சேர்க்கவும் தேவையான அளவு மட்டும்.உப்பும் மற்றும் தண்ணீர் சேர்த்து, பிழியும் பதத்துக்குப் பிசையவும்.கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், ரிப்பன் அச்சில் மாவை நிரப்பி எண்ணெய்யில் பிழியவும்.முறுக்கு வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
அவல் மிக்சர்தேவைஅவல் – 2 கப்ஓமப்பொடி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை – 1/4 கப்மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் அவல், ஓமப்பொடி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு பொரித்து எடுத்து, ஒன்றாகச் சேர்க்கவும்.அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.பிறகு, பரிமாறவும்.

பொட்டுக்கடலை தட்டைதேவைபொட்டுக்கடலை மாவு – 1 கப்அரிசி மாவு – 1/2 கப்நெய் – 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்வெள்ளை எள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய்த்தூள், எள் ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.அதிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மெல்லியதாக தட்டவும்.அதனை அடுப்பிலிருக்கும் சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை பட்டர் முறுக்குதேவைபொட்டுக்கடலை – 2 கப்அரிசி மாவு – 1/2 கப்வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைமிக்ஸியில் பொட்டுக்கடலையை மாவாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெய், அரிசி மாவு, உப்பு, சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.ஒரு துளையுள்ள அச்சில் நிரப்பி, அடுப்பில் சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் பிழியவும்.பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஆற வைத்து, துண்டுகளாக்கி காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்துப் பரிமாறலாம்.

பட்டர் முறுக்குதேவைகடலை மாவு – 1 கப்அரிசி மாவு – 1 கப்வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் – 1/4 கப்உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறைஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும்.பிறகு, கடலை மாவையும், அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.’ஸ்டார்’ வடிவ துளையிட்ட அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.’கரகர’ வென கரையும் இந்த பட்டர் முறுக்கு செய்முறையும் சுலபம்.

கார துக்கடிதேவைகடலை மாவு – 2 கப்மைதா மாவு – 1/2 கப்மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்ஒமம் – 1/2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவுசெய்முறைமேலே கூறிய எல்லா சாமான்களையும் தண்ணீர் விட்டு, நன்கு மிருதுவாகப் பிசையவும்.சிறிய பூரிகளாக இடவும்.பூரியின் இருபுறமும், ஃபோர்க்கின் உதவியால் லேசாக குத்தவும்.இந்த பூரிகளை, ஈரம் போகும் வரை மெல்லிய துணியில் வைத்திருந்து, பிறகு எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.
மட்ரிதேவைமைதா மாவு – 200 கிராம்நெய் – 100 கிராம்ஓமம் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசீரகம் – சிறிதளவு (தேவைப்பட்டால்)செய்முறைமைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்துப் பிசையவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.ஓமம், சீரகம் இரண்டையும் மாவுடன் சேர்த்துப் பிசையவும்.பிறகு மாவை சிறு உருண்டைகளாக்கி, தட்டைகளாகத் தட்டி, அதன் நடுவில் லேசாக அழுத்தி, எண்ணெய்யில் போட்டு, பொரித்து அடுக்கவும். மொறு மொறு மட்ரி ரெடி.
புதினா ஓமப்பொடிதேவைபுதினா – 1 கட்டுகடலை மாவு – 4 கப்பச்சரிசி மாவு – 2 கப்காரப்பொடி – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய், நெய் – சிறிதளவுசெய்முறைபுதினா இலையை நன்கு அரைத்துக் கொண்டு, சாறு பிழிந்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.கடலை மாவு, அரிசி மாவு, காரப்பொடி, உப்பு ஆகியவற்றுடன் பிழிந்து வைத்துள்ள புதினாச் சாறையும் சேர்த்து, சூடான எண்ணெய், நெய் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.ஒமப்பொடி அச்சில் மேற்சொன்ன மாவுக் கலவையைப் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும்.வெந்தவுடன் எண்ணெய் சொட்ட வைத்தால் சுவையான புதினா ஒமப்பொடி தயார்.
பூண்டு காராசேவ்தேவைபச்சரிசி மாவு – 4 கப்உளுந்து – 1/4 கப்பூண்டு – 10 பல்வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம், பெருங்காயம், மிளகு – சிறிதளவுசெய்முறைபூண்டை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.உளுந்தைப் பொன்னிறமாக வறுத்து, நன்றாக அரைத்து, சலித்துக் கொள்ள வேண்டும்.பின் அரிசி மாவுடன் உளுந்தமாவைக் கலந்து, வெண்ணெய், சீரகம், பெருங்காயம், மிளகு, பூண்டு விழுது அனைத்தையும் பிசைந்து கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டிப் பதமாக்கவும்.காராசேவ் செய்வதற்கென்றே கடைகளில் கிடைக்கும் தட்சை வாங்கி, அதில் இந்த மாவை வைத்துத் தேய்த்து, எண்ணெய்யில் விட்டு, பொன்னிறமாக எடுத்தால், மொறுமொறுப்பான பூண்டு காராசேவ் ரெடி.