Tag Archives: குழம்பு

சுண்டைக்காய் குழம்பு

செய்முறை: 200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உரித்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளிக்காய்ச்சல், அரைத்த சீரகம், 1 சிட்டிகை மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். மிதமான தீயில் வைக்கவும். சுண்டைக்காய் குழம்பில் எண்ணெய் மிதந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

மட்டன் குழம்பு

தேவை:
மட்டன் – 500 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லிதூள் – 1 கரண்டி
உப்பு மஞ்சள்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 100 கிராம்
சீரகத்தூள் – 1 கரண்டி
மிளகாய் – 5

செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறி, சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேக வைத்து இறக்கவும். குழம்பு எண்ணெய் தெளிந்து கெட்டியாக பிரட்டினாற் போல் வைக்கவும்.