Tag Archives: goat

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

ஆட்டு நுரையீரல் கூட்டு

தேவை:
ஆட்டு நுரையீரல் – 1
கடலை பருப்பு – 150 கிராம்
மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் – 1/4 முடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:
நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.

உப்புக் கறி

தேவை:
மட்டன் – 600 கிராம்
பூண்டு – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
வரமிளகாய் – 75 கிராம்
சோம்பு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, உளுந்து, மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்பு தோல் நீக்கிய பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, கருவேப்பிலை போட்டுக் கிளறவும். கடைசியாக மட்டன் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு போடவும். 10 நிமிடத்திற்கு பிறகு 2 டம்ளர் வெந்நீர் ஊற்றி லேசான தீயில் வேக விடவும். கறி நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.