Category Archives: Sweets

This Category comprises of Chettinad Sweet Dishes and Recipes

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

ஸ்பாஞ்ச் கேக்

தேவை:
முட்டை – 250 கிராம்
பொடிக்கப்பட்ட சீனி – 250 கிராம்
பேக்கிங் பவுடர் – 4 தேக்கரண்டி (தலை தட்டிய அளவு)
வெனிலா அல்லது பைனாப்பிள் எஸன்ஸ் மைதா – 250 கிராம்
வெண்ணெய் – 250 கிராம்

செய்முறை:
பேக்கிங் பவுடரை மைதாவுடன் கலந்து நன்றாக சலித்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி எலெக்ட்ரிக் பீட்டர் உதவியால் அடிக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நன்றாக க்ரீம் ஆகும் வரை கடையவும். இடையிடையே அடித்து வைத்திருக்கும் முட்டையையும் இதில் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கடையவும். எஸன்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஏற்கனவே பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலித்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். மாவு சேர்ந்த பின் வேகமாக கடையக் கூடாது. அகலமான கரண்டியால் கலக்கவும். எலெக்ட்ரிக் பீட்டரில் ஸ்லோ என்ற குறைந்த அளவு வேகத்தை உபயோகிக்கவும்.

கறி கோலா உருண்டை சிப்ஸ்

தேவையான பொருட்கள்:
கறி – கால் கிலோ (கொந்தியது)
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையானது
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன் (ஊற வைத்தது)
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தக்க அளவு

செய்முறை:
 கறியை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு, கடலைப்பருப்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்தது கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை கறியுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நன்றாக ஆறிய உடன் கூர்மையான கத்தி கொண்டு மெல்லிய வில்லையாக வெட்டி வைக்கவும். பிறகு எண்ணெயில் கருவேப்பிலை பொரித்து எடுத்து வைக்கவும். பிறகு வெட்டிய கோலா உருண்டை சிப்சை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூட்டுடன் மிளகுத்தூள் தூவி உப்பு போட்டு, பொரித்து கருவேப்பிலை போட்டு நன்றாக குலுக்கி வைக்கவும். இது சுடச்சுட ரசம் சாதம் உடன் சாப்பிடவும்.

குறிப்பு: கறி கொந்தியதாக வாங்க வேண்டாம், கறி பீஸாக வாங்கி நாம் வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.