•December 12, 2009 •
Leave a Comment
தேவை:
சீலாக் கருவாடு – 1 துண்டு
பூண்டு – 100 கிராம்
கடுகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
புளி – 1 கொட்டை
நல்லெண்ணெய் – 4 கரண்டி
வற்றல் – 1 அல்லது 4
உப்பு, மஞ்சள், மிளகு
செய்முறை:
மசாலை புளியுடன் நன்றாக அரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைப் பூண்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்துப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் போட்டுக் கொதிக்க விடவும். பூண்டு வெந்து இறக்கும் பதம் வரும் போது கருவாட்டைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
Posted in Non. Veg. - Fish
Tags: கருவாட்டுக், குழந்தை, குழம்பு, பெற்றவர்க்கு, வைக்கும்
•December 12, 2009 •
Leave a Comment
தேவை:
கொத்துக்கறி – 200 கிராம்
ரொட்டி – 100 கிராம்
முந்திரிப்பருப்பு – 75 பைசா
பூடு – 20 பைசா
நறுக்கிய வெங்காயம் – கொஞ்சம்
முட்டை – 1
உருளைக்கிழங்கு – 200 கிராம்
இஞ்சி – 15 பைசா
கொத்தமல்லிச்செடி – சிறிது
பச்சை மிளகாய் – 5
கருவாபட்டை, அன்னாசிப் பூ
செய்முறை:
கொத்துக்கறியுடன் பட்டை, அன்னாச்சிப்பூ, பூடு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லிச் செடி இவைகளை போட்டு வதக்கி முந்திரிப்பருப்பு இவைகளையும் சேர்த்து ஆட்டி, முட்டையிலுள்ள மஞ்சள் கருவை பிசைந்து கொண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து உப்புப்போட்டு நன்றாக பிசைந்து வட்டமாகத் தட்டி கறியை உள்ளே வைத்து மூடி தட்டி வெள்ளைக்கருவில் முக்கி ரொட்டித் தூளில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றிச் சுட வேண்டும்.
Posted in Non Veg. Mutton
Tags: கட்லெட், கறி, கறி கட்லெட்
•December 12, 2009 •
Leave a Comment
தேவை:
ரொட்டிதுண்டு – 5 எண்ணம்
எண்ணெய் – 50 மி.லி.
மிளகுதூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
முட்டை – 3 எண்ணம்
பொரிகடலை – 50 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
செய்முறை:
முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் பொரி கடலைமாவு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயை ஊற்றி முட்டை கலவையை தோசையாக ஊற்றவும். அதன் மேல் ரொட்டி துண்டை வைத்து முட்டை தோசையை மடித்து ரொட்டி துண்டு வெளியில் தெரியாதபடி செய்யவும். திருப்பி வைத்து பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும். இது சுவையாக இருக்கும்.
Posted in Non. Veg. - Egg
Tags: எக், எக் பிரட், பிரட்
•December 12, 2009 •
Leave a Comment
தேவை:
தொடை கறி – 200 கிராம்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
வினிகர் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை:
ஆட்டின் முன் தொடைகறியை வாங்க சம அளவுக்குள் துண்டுகள் வெட்டி சுத்தம் செய்து கழுவி வைக்கவும. உப்பு, மிளகுத்தூள், வினிகர், எண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும். கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்தி கட்டையால் தட்டி சதுரமாக பரத்தவும். கறித்துண்டுகளை எடுத்து மிளகு கலவையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். தோசைக் கல்லை காய வைத்து (எண்ணை விட வேண்டியதில்லை) ஊறிய கறிதுண்டுகளை மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் பொன் வறுவலாக எடுக்கவும்.
Posted in Non Veg. Mutton
Tags: கறி, சுட்ட, சுட்ட கறி