Tag Archives: இட்லி

கோதுமை ரவை இட்லி

தேவையானபொருட்கள்

கோதுமைரவை-1கப்
கடலைப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர்-1கப்
எண்ணெய்-1டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி-சிறிது
மிளகு-1/4டீஸ்பூன்

செய்முறை

பச்சைமிளகாய்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமைரவையையும்,கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு,மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புளித்ததயிர்,எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சுடாகப் பரிமாறவும்.

 

இட்லி பொடிமாஸ்

வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு, மிகுந்து விட்ட இட்லிகளை இப்படி ஒரு புதிய பொருளாகச் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:-
இட்லி – 12
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 3
எண்ணெய் – 5 மேஜைக் கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு – 2 மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
மிளகு, சீரகத்தூள் – கொஞ்சம்

செய்முறை:-
இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டுத் தாளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைப் போடுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறி, மேலே மிளகு சீரகத் தூளைத் தூவிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டுக் குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும், இந்த இட்லி பொடிமாஸை மாலை டிபனாகக் கொடுக்கலாம்.

இட்லி

தேவையான பொருள்கள்:-
புழுங்கல் அரிசி – 4 ஆழாக்கு
உளுந்து – 1 ஆழாக்கு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. அது போலத் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இட்லி அவிப்பது எப்பு என்று சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
ஆயினும் வசதி படைத்த – படித்த டீன் ஏஜ் பெண்களைக் கருத்தில் கொண்டு, அதையும் இங்கே விளக்கிக் கூறுகிறோம்.
முதல் நாள் மாலையிலேயே புழுங்கல் அரிசி, உளுந்து ஆகியவற்றைத் தனித் தனியாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
மாவில் உப்புப் போட்டு, ஒன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த நாள் காலையில் மாவு புளித்திருக்கும்.
இட்லிப் பானையில், ஒவ்வொரு குழியிலும் துணியைப் பரப்பி, மாவை ஊற்றி, மூடி வைத்து விடுங்கள்.
நன்றாக வெந்ததும், எடுத்து சுடச்சுட – சாம்பார் ஊற்றியோ, அல்லது சட்னியைத் தொட்டுக் கொண்டோ – (சிலருக்கு இரண்டும் வேண்டும்) – சாப்பிடுங்கள்.