உப்புக் கண்டம் குழம்பு

தேவையான பொருட்கள்:
உப்புக் கண்டம் – 5 துண்டு
துவரம் பருப்பு – 100 கிராம்
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்
புளி சாறு – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 4
பூண்டு – 5 பல்
கடுகு – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
உப்புக் கண்டம் என்றால் கறியை உப்பு உடன் பிசைந்து ஒரு மாதம், வெயிலில் காய வைத்து எடுக்கவும். இது தான் உப்புக் கண்டம். உப்புக் கண்டத்தை அம்மியில் தட்டி குக்கரில் போட்டு துவரம்பருப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, தட்டிய பூண்டு, உப்பு சேர்த்து கால் மணி நேரம் வேக விட வேண்டும். வெந்த பிறகு, புளி சாறு ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி மூடி வைக்கவும்.

Leave a comment