Tag Archives: பொடி கறி

பொடி கறி

தேவையான பொருட்கள்:
ஈரல் – 100 கிராம்
கறி – 200 கிராம்
பூ – 100 கிராம்
மாங்காய் – 100 கிராம்
நுரையீரல் – 100 கிராம்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தனியா – 4 ஸ்பூன் (வறுத்து பொடியாக்கவும்)
மிளகாய் – 10 ஸ்பூன் (வறுத்து பொடியாக்கவும்)
சோம்பு – 1 ஸ்பூன் (பொடியாக்கவும்)
பட்டை – 2 (வறுத்து பொடியாக்கவும்)
லவங்கம் – 2 (வறுத்து பொடியாக்கவும்)
சீரகம் – 1 டீஸ்பூன் (வறுத்து பொடியாக்கவும்)
ஏலக்காய் – 2 (வறுத்து பொடியாக்கவும்)
மிளகு – 2 டீஸ்பூன் (வறுத்த பொடியாக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 தனியா முதல் மிளகு வரை உள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கி, மஞ்சள் தூள், தக்காளி, கறி, நுரையீரல் போட்டு வதக்கி, 1 தம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேக விட்டு, பிறகு ஈரல் வகைகளைப் போட்டு உப்பு போடவும். எல்லாம் நன்றாக வெந்த பிறகு வறுத்து பொடி செய்ததை தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்.