Tag Archives: பர்ஃபி

பேரீச்சம்பழ பர்ஃபி

தேவை
மில்க் மெயிட் – 1 டின்
பேரீச்சம்பழம் – 1/2 கிலோ
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பேரீச்சம்பழங்களைக் கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, சூடானதும் அதில் மைதாமாவைப் போட்டுப் பொரிக்கவும்.
அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிவரும் பொழுது, பேரீச்சம்பழம், மில்க் மெயிட் சேர்த்து, நன்றாக கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறினதும் வில்லைகள் போடவும்.
குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற, இரும்புச்சத்து நிறைந்த பர்ஃபி இது.

சாக்லேட் பர்ஃபி

தேவை
டார்க் சாக்லேட் – 200 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா – 400 கிராம்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம் துண்டுகள் – 1/4 கப்
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் கோவாவைப் போட்டு 3 நிமிடம் கிளறவும்.
பிறகு, பாதாம் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி, தனியே வைக்கவும்.
சாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சாக்லேட்டை போட்டால் அது உருக ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே கிளறி வைத்துள்ள கோவாவை 3 பாகங்களாகப் பிரிக்கவும்.
ஒரு பாகத்தில் உருகிய சாக்லேட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மீதமிருக்கும் ஒரு பாக கோவாவை, நெய் தடவிய தட்டு ஒன்றில் பரப்பவும்.
அதன் மீது சாக்லேட் கலந்து கோவா கலவையை பரப்பவும்.
அதன் மீது மற்றொரு பாக்தை (கோவா) பரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
நன்றாகக் குளிர்ந்ததும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.