சிக்கன் பிட்ஸ்தேவை:கோழிக்கறி – 500 கிராம் (அரைக்க வேண்டும்)இஞ்சி பூண்டு – அரைத்தது 2 ஸ்பூன்மைதா மாவு – 100 கிராம்உப்பு – சுவைக்கேற்பபட்டை மிளகாய் தூள் – 3 ஸ்பூன்கடலை மாவு – 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 200 மி.லி.
செய்முறை: அரைத்த கோழிக்கறி, அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். கோழிக்கறி மிளகாய் வடிவத்தில் பிடிக்கவும். கடலைமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிடித்து வைத்துள்ள கோழிக்கறி பிட்ஸ்களை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
சைனீஸ் சூஸ்தேவை:முந்திரிப்பருப்பு வெட்டியது – 1 கப்பேரீச்சம்பழம் – 1 கப்முட்டை – 2பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிசீனி – 1 கப்மைதா – 3/4 கப்வெனிலா – 1 தேக்கரண்டிஉப்பு – 1/4 தேக்கரண்டி
செய்முறை: மாவு, உப்பு, பேக்கிங் பவுடரை நன்றாகச் சலிக்கவும். கடைந்த முட்டை, முந்திரிப்பருப்பு, பேரீச்சம் பழம் சேர்க்கவும். பின் ஒவனில் பேக் பண்ணவும். வெந்ததும் வில்லைகளாக வெட்டவும். பின் ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும்.
வேக வைத்த மீன்தேவை:மீன் – 1/2 கிலோமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 3பச்சை மிளகாய் – 4கடுகு – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையானதுஉப்பு – தேவையான அளவு
செய்முறை: மீனைக் கழுவி துண்டுகளாக்கி உப்பைத் தடவி வைக்கவும். மஞ்சள்தூள், வரமிளகாய், கடுகு இவற்றை விழுது போல் அரைக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். அரைத்த மசாலாவை மீனுடன் கலக்கவும். எண்ணெய் மற்றும் மிளகாயை சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் குக்கரில் வேக விட்டு இறக்கவும். அவித்த மீன் ரெடி.

மெக்ரூன்ஸ்தேவை:முட்டை (வெள்ளைக்கரு) – 4முந்திரிப்பருப்பு துருவியது – 250 மி.லி.சீனி – 250 மி.லி.
செய்முறை: முட்டை வெள்ளைக் கருவை சிறிது கூட மஞ்சள் கலக்காமல் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முள் கரண்டி வைத்து வெள்ளைக்கருவை நன்கு நுரை பொங்க பாத்திரத்தைக் கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும். சீனியையும் சிறிது சிறிதாகச் கலக்கி அடித்தால் வெள்ளைப்பனிமலை போல் பொங்கி வரும். 30 – 35 நிமிடம் ஆகும். நறுக்கிய முந்திரிப்பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக் கருவுடன் (யீஷீறீபீ ஷீஸீ) நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு மேஜைக்கரண்டி கலவையைக் கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100 – 150 டிகிரி சூட்டில் வேக வைக்கவும்.
முட்டை பொரியல்தேவை:முட்டை – 2வெண்டைக்காய் – 1/2 கிலோசிறிய வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 4கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்மிளகு, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையானதுமஞ்சள்தூள் – 1 சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முட்டையை உடைத்து அதனுடன் மிளகு , சீரக, மஞ்சள்தூள் லேசாக உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், வெண்டைக்காய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சுருள வதக்கவும். அடுத்து, முட்டைக்கலவையை இதில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.
பட்டர் பிஸ்கட்தேவை:மைதா – 500 மி.லி.சீனி – 150 மி.லி.பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டிடால்டா அல்லது நெய் – 100 மி.லி.எஸன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை: மைதாவையும், பேக்கிங் பவுடரையும் நன்கு சலிக்கவும். அதனுடன் சீனியைப் பொடித்து மாவாக்கிக் கலக்கவும். டால்டா அல்லது நெய் இளக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து பூரிமாவு பக்குவம் வந்தவுடன் அப்படியே வைக்கவும். பின் பூரிப்பலகையில், பூரிக்கட்டை கொண்டு அரை சென்டி மீட்டர் திண்ணத்தில், பூரிக்கட்டைக் கடினமாக அழுத்தாமல் உருட்டவும். பிஸ்கட் வடிவ அச்சு அல்லது ஹார்லிக்ஸ் பாட்டி மூடியை வைத்து வட்ட வட்ட அச்சாக வெட்டி கேக் அடுப்பு தட்டில் அடுக்கவும். இளம் சூட்டில் வேக வைக்கவும். கடையில் வாங்கும் பட்டர் பிஸ்கட் மாதிரியே இருக்கும். எசன்ஸ்க்குப் பதில் சுக்குத்தூள் அல்லது ஏலக்காய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்ந்தாலும் பிஸ்கட் ருசியும், மணமும் சேர்ந்து இருக்கும். நெய் அல்லது டால்டா மட்டுமே சேர்க்கவும். (வெண்ணெய் சேர்த்தால் பிஸ்கட் கடினமாகிவிடும்).
மட்டன் பிரியாணிதேவை:பிரியாணி அரிசி – 250 கிராம்நெய் – 100 கிராம்பெரிய வெங்காயம் – தேவையான அளவுபச்சை மிளகாய் – சிறிதளவுவறுத்த மல்லி – 2 டீஸ்பூன்மட்டன் – 250 கிராம்தேங்காய் – 1/2 முடிகொத்தமல்லி தழை – சிறிதளவுபெரிய சீரகம் – 1 டீஸ்பூன்கிராம்பு, ஏலம், பட்டை, நெய்யில் வறுத்து வைக்கவும்.
செய்முறை: அரிசியை சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். குக்கரில் வெட்டிய கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 700 கிராம் நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், புதினா, இலை சேர்த்து வதக்கவும். அவித்த கறி, அரைத்த மசால், அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வைத்து தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக கொதிக்க வைக்கவும். தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி சிறிது உப்பும் சேர்த்து கிளறி இளந்தீயில் குக்கரை மூடி 10 நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி தம் கட்டி சூடாக வைத்து பரிமாறவும்.
முந்திரிப்பருப்பு பிஸ்கட்தேவை:முந்திரிப்பருப்புத்தூள் – 50 கிராம்சீனி – 150 கிராம்மைதா – 250 கிராம்முட்டை – 1மார்கரீன் (வெண்ணெய் – 150 கிராம்
செய்முறை: (வெண்ணெய்) மார்க்ரீனையும் (விணீக்ஷீரீணீக்ஷீவீஸீமீ) பொடித்த சீனியையும் கடையவும். கடைந்த முட்டையையும், எசன்ஸையும் சேர்க்கவும். மாவை சலித்து முந்திரிப்பருப்புத் தூளுடன் சேர்க்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம். பூரிக்கட்டையில் தேய்த்து வில்லைகள் போடவும். ஒவனில் 350 டிகிரியில் பேக் பண்ணவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s