மீன் கட்லெட்தேவை:சதை அதிகமுள்ள மீன் – 1/2 கிலோபெரிய வெங்காயம் – 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)முட்டை – 1பிரட் தூள் – தேவையானதுஇஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்மிளகுதூள் – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்கொத்தமல்லி இலை – 1 (சிறிய கட்டு)பச்சை மிளகாய் – 6எண்ணெய் – பொரிக்கஉப்பு – தேவையான அளவு
செய்முறை: மீனில் மஞ்சள் தூள், சேர்த்து வேக விட்டு, முள், தோல் நீக்கி தூளாக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். இதில் மீன் கலவையை சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி நீள வாக்கில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருண்டைகளை நனைத்து பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
ஸ்பெஷல் மட்டன் மசாலாதேவை:மட்டன் – 500 கிராம்தக்காளி – 100 கிராம்இஞ்சி, பூண்டு – சிறிதளவுஉப்பு – சிறிதளவுமல்லிப்பொடி – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – சிறிதளவுபெரிய வெங்காயம் – சிறிதளவு
செய்முறை: மட்டன் சுத்தம் செய்து துண்டுகளாக்கி, பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும். நெய் விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும். பொன் நிறத்தில் வரும் போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். மட்டன் ஓரளவு வெந்து வரும் போது கறிமசாலா தவிர, மீதியை அரைக்கவும். மசாலாக்களை அதில் போட்டு கிளறவும். பின்பு மூடி வைத்து வேக விடவும். வெந்து வரும் போது கறிமசால்பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும். மட்டன் மேல் படியும் போது இறக்கி விடவும்.
சைனீஸ் நூடில்ஸ்தேவை:அவித்து வடிகட்டிய நூடில்ஸ் – 8 அவுன்ஸ்காரட் வெட்டியது – 1 கப்சோயா பீன்ஸ் – 1 தேக்கரண்டிசமைத்த சிறு துண்டுகளாக வெட்டிய கோழி – 1 1/2 கப்அவித்த கோழி அல்லது ஸ்டாக் கேப்சிகம் பச்சை பீன்ஸ் – 1 கப்கார்ன் பிளவர் அல்லது மைதா – 2 தேக்கரண்டிகோஸ் நீளமாக வெட்டியது உப்பு, மிளகுத்தூள் பெல்லாரி நீளமாக வெட்டியது.
செய்முறை: அவித்து வடிகட்டிய நூடில்ஸ் உடன் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். ஒரு கையளவு நூடில்ஸை எண்ணெயில் ப்ரவுன் செய்து அலங்கரிக்கத் தனியே எடுத்து வைக்கவும். இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி நீளமாக தீக்குச்சி போன்ற அரிந்து வைத்திருக்கும் காய்கறிகளையும், வதக்கவும். சிறு தீயில் தன் தண்ணீரிலேயே வெந்து விடும். உப்பு, மிளகுத்தூள், உரித்த கோழித்துண்டுகள் சேர்த்து ஸ்டாக்கில் கார்ன்பிளவர் கலந்து காய்கறிகளுடன் சேர்த்து, நூடில்சையும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். சோயா பீன்ஸ் ஊற்றி பரிமாறவும்.
முட்டைக் குழம்புதேவை:முட்டை – 4தேங்காய் பால் – 3 டம்ளர்ப.மிளகாய் – 4வெங்காயம் – 100 கிராம்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்பூண்டு – 4 பல்கறிவேப்பிலை – 1 கொத்துஉப்பு – தேவையான அளவுசோம்பு – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும். இக்கலவையை நன்கு கொதிக்க விடவும். இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீதமுள்ள தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.
குழந்தை பெற்றவர்க்கு வைக்கும் கருவாட்டுக் குழம்புதேவை:சீலாக் கருவாடு – 1 துண்டுபூண்டு – 100 கிராம்கடுகு – 2 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிபுளி – 1 கொட்டைநல்லெண்ணெய் – 4 கரண்டிவற்றல் – 1 அல்லது 4உப்பு, மஞ்சள், மிளகு
செய்முறை: மசாலை புளியுடன் நன்றாக அரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைப் பூண்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்துப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் போட்டுக் கொதிக்க விடவும். பூண்டு வெந்து இறக்கும் பதம் வரும் போது கருவாட்டைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஆட்டு நுரையீரல் கூட்டுதேவை:ஆட்டு நுரையீரல் – 1கடலை பருப்பு – 150 கிராம்மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்தக்காளி – 2தேங்காய் – 1/4 முடிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுசோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை: நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.
ஸ்பாஞ்ச் கேக்தேவை:முட்டை – 250 கிராம்பொடிக்கப்பட்ட சீனி – 250 கிராம்பேக்கிங் பவுடர் – 4 தேக்கரண்டி (தலை தட்டிய அளவு)வெனிலா அல்லது பைனாப்பிள் எஸன்ஸ் மைதா – 250 கிராம்வெண்ணெய் – 250 கிராம்
செய்முறை: பேக்கிங் பவுடரை மைதாவுடன் கலந்து நன்றாக சலித்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி எலெக்ட்ரிக் பீட்டர் உதவியால் அடிக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நன்றாக க்ரீம் ஆகும் வரை கடையவும். இடையிடையே அடித்து வைத்திருக்கும் முட்டையையும் இதில் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கடையவும். எஸன்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஏற்கனவே பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலித்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். மாவு சேர்ந்த பின் வேகமாக கடையக் கூடாது. அகலமான கரண்டியால் கலக்கவும். எலெக்ட்ரிக் பீட்டரில் ஸ்லோ என்ற குறைந்த அளவு வேகத்தை உபயோகிக்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s