சில்லி சிக்கன்தேவை:கோழிக்கறி – 500 கிராம்பூண்டு – 5பச்சை மிளகாய் – சிறிதளவுஎண்ணெய் – 100 கிராம்பட்டை மிளகாய் – 1 ஸ்பூன் (அரைத்தது)வினிகர் – 1 ஸ்பூன்உப்பு – சிறிதளவு
செய்முறை: கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, மிளகாய் அரைத்தது, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறி 1/2 மணி நேரம் ஊற வைத்து கோழிக்கறி கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமாக எறிய விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும் போது இறக்கி வைக்க வேண்டும். இது சுவையாக இருக்கும்.
கேரளா மீன் குழம்புசெய்முறை: 500 கிராம் வஞ்சிரம் அல்லது சுறா மீன் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 2 பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் 5 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல், 1 தேக்கரண்டி சோம்பு (பெருஞ்சீரகம்) இவற்றை வறுத்து எடுதுது வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். வதங்கிய பின் 1 டம்ளர் வெந்நீர் ஊற்றவும். இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் மீன் துண்டுகளைப் போடவும், மீன் துண்டுகள் வெந்ததும், அரைத்த மசாலாவைப் போட்டு சில நிமிடங்கள் கொதித்ததும் வறுத்த கருவேப்பிலையைப் போட்டு, இறக்கி உபயோகிக்கவும்.
தந்தூரி சிக்கன்தேவை:கோழி – 1எலுமிச்சம்பழம் – 2தயிர் – 6 மேஜைக்கரண்டிசிகப்பு பவுடர் – 1/4 தேக்கரண்டிடால்டா – 25 கிராம்மிளகுத்தூள், உப்பு – தேவையானது  செய்முறை: கோழியை தோல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி முள் கரண்டியால் நன்றாக குத்தி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து, தயிர், மிளகுத்தூளு, கலர் பவுடர் கலந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்புக்கரியை பெருக்கி கறியை சுத்தமான கம்பியில் குத்தி தணலில் சுட்டு எடுக்கவும். ஒரு ப்ளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு கறியாக சுடவும். ஒரு முறை சுட்டக் கறியை பிரட்டி மறுபடியும் கம்பியில் மாட்டி கறியை நன்றாக எல்லாப் பக்கமும் வேக விடவும். இதே போல் மற்ற எல்லாக் கறித்துண்டுகளையும் தயாரிக்கவும்.
சாப்ஸ் மீன்தேவை:நல்லெண்ணெய் – 100 மி.லி.கடுகு, சீரகம் – 2 ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமீன் துண்டுகள் – 6 எண்ணம்மிளகுத்தூள் – 2 ஸ்பூன்சோயா சாஸ் – சிறிதளவு
செய்முறை: முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வதக்கவும். மீன், உப்பு, மிளகு தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குறைந்த தீயில் வேக வைக்கவும். மீன் வெந்து பக்குவமானதும் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பரப்பி எடுத்து இறக்கி மூடி வைக்கவும். ஆறியதும் உண்ணலாம்.
ஜிஞ்சர் சில்லி சிக்கன்செய்முறை: இஞ்சி 1 துண்டு பச்சை மிளகாய் 4 இரண்டையும் மிகப் பொடியாக வெட்டவும். வாணலியில் ஒரு கரண்டி டால்டா ஊற்றி நைசாக வெட்டிய இஞ்சி, மிளகாய் துண்டுகளை சிவக்க வதக்கி முன்பு சைனீஸ் சிக்கன் ப்ரையில் கூறிய படி பொரித்தெடுத்த கறித்துண்டுகளை அதில் போட்டு குக்கரில் மீதமுள்ள கிரேவியையும் ஊற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
வாத்து ரோஸ்ட்தேவை:வாத்து இறைச்சி – 1 கிலோமிளகாய்தூள் – 2 டேபிள் டீஸ்பூன்தனியாதூள் – 2 டேபிள் டீஸ்பூன்மிளகுதூள் – 1/2 டேபிள் டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்பெ. சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்கிராம்பு – 2பட்டை – 1 துண்டுபெ.வெங்காயம் – 1 கப்இஞ்சி – 1 துண்டுபூண்டு – 1வினிகர் – 1/2 டேபிள் டீஸ்பூன்உப்பு – தேவையானதுகடுகு – 1 டீஸ்பூன்உருளைக்கிழங்கு – 2எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: இறைச்சியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை அரை வேக்காடாக்கி ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கவும். மசாலா பொருட்களை நைஸாக அரைத்து அதில் உப்பு, வினிகர் கலந்து கறியில் பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். சிறிதளவு மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும். எண்ணெயில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். தனியாக சிறிதளவு எண்ணெய் எடுத்து அதில் கடுகை தாளித்து பெ. வெங்காயத்தை வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்த கறித்துண்டுகளை போட்டு 2 கப் வெந்நீர் விட்டு வேக வைக்கவும். கலவை கெட்டியாகி இறக்கும் தருவாயில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும்.
சிக்கன் மஞ்சூரியன்தேவை:எலும்பு நீக்கிய 1 அங்குலத்திற்கு – 450 கிவெட்டிய கோழி துண்டுகள்
மேல் மாவுக்கு தேவையானவைமைதா மாவு – 115 கிபேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்கார்ன் ப்ளவர் – 50 கிமுட்டை – 1உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதில் கறி துண்டுகளை ஒவ்வொன்றாக தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய 30 கி, வெங்காயம் 75 கி, மிளகாய் 50 கி, பூண்டு 30 கி, குடைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் சோயா சாஸ், 1/4 டீஸ்பூன் வினிகர், 1/2 டீஸ்புன் அஜினமோட்டா சால்ட் சேர்த்து சிறிது ஷிtஷீளீ ஊற்றி தேவையான உப்பும், 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்ம் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். எல்லாம் சேர்த்து கட்டியாக வந்த பின் தனியாக பொரித்து வைத்திருக்கும் கறி துண்டுகளை அதனுடன் கலந்து உபயோகிக்கவும்.
குறிப்பு: ப்ராய்லர் கோழி தான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது வேக வைக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s