அசைவ சமையல் குறிப்புகள்
கறி பிரியாணிதேவை:பிரியாணி அரிசி – 1/4 படிகறி – 250 கிராம்தேங்காய் – 1/2 முடி பால் எடுக்கவும்இஞ்சி – 3 அங்குலம் அரைப்பதற்குபூண்டு – 1நெய்யில் வறுத்த பட்டை – 1 அங்குலம்கிராம்பு – 6கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (வறுத்தது)புதினா, கொத்தமல்லி தழை பெல்லாரி – 2மிளகாய் – 6ஏலக்காய் – 6பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை: அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய காய்கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/8 படி நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம், புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும். அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.
மீன் ரோஸ்ட்செய்முறை: 500 கிராம் மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான உப்புத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பின் வாணலியில் 300 கிராம் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுத்து உபயோகிக்கவும். 2 முட்டைகளை அடித்து மீன் துண்டுகளை அதில் நனைத்து எடுத்தும் வறுக்கலாம். (ளிஜீtவீஷீஸீணீறீ) நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித்தழைகளை எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.
கோழி வறுவல்தேவை:கோழி (எலும்பு நீக்கப்பட்ட நடுத்தர சைஸ் துண்டுகள்) – 1இஞ்சி, பூண்டு சாறு – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தாளிக்கஉப்பு – தேவையான அளவு
செய்முறை: கோழிக்கறி, இஞ்சி, பூண்டு சாறு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
கோழி பஜ்ஜிதேவை:காக் பிராண்ட் பஜ்ஜி மாவு – 200 கிராம் (பாக்)மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்உப்பு – சிறிதளவுநெஞ்சுக்கறி கோழி – 500 கிராம்எண்ணெய் – 200 மி.லி.
செய்முறை: கோழிக்கறியை விரல் நீள துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து சிறிது உப்பு மிளகாய் தூள் தூவி ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து (பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்). கரைத்த மாவில் கோழிகறி துண்டுகள் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது சுவையாக இருக்கும்.
ஆட்டுக்கால் சூப்தேவை:ஆட்டுக்கால் – 4சீரகம் – 2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் – 10மிளகு – 3 தேக்கரண்டிமல்லி (தனியா) – 2 தேக்கரண்டிபல் பூண்டு – 5
செய்முறை: 4 கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் 3 தேக்கரண்டி மிளகு 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி மல்லி (தனியா) 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, இவற்றை அரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி இத்துடன் அரைத்த மசாலா கால் துண்டுகள் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். விசில் சப்தம் கேட்டு 20நிமிடங்கள் கழித்து இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால்கறியுடன் சேர்த்து கிளறவும்.
சிக்கன் அடைதேவை:காக் அடை மாவு – 500 கிராம்மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவுகோழிக்கறி – 250 கிராம்மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்பூண்டு, வெங்காயம் – சிறிதளவு
செய்முறை: கோழிக்கறி எலும்பு இல்லாமல் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வைத்து சிறிது தயிர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடைமாவை தண்ணீரில் ஊற்றி வெங்காயம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் நறுக்கி போட்டு ஊறவைக்க வேண்டும். அதனுடன் ஊற வைத்த கோழிக் கறியை கலக்க வேண்டும். பிறகு தோசை கல்லில் ஊத்தப்பம் போல் எண்ணெயில் ஊற்றி சுட வேண்டும். இது சுவையாக இருக்கும்.
தலைக்கறிக்குழம்புதேவை:சுத்தம் செய்த ஆட்டுத்தலை – 1 (வெட்டியது)மல்லி விதை – 2 தேக்கரண்டிதேங்காய் – 1/2 முடிவெங்காயம் – 10நல்லெண்ணெய் – 5 கரண்டிஉப்பு, மஞ்சள் தூள் வற்றல் – 10சீரகம் – 2 தேக்கரண்டி
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் போட்டு வதக்கி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும்.
சைனீஸ் சிக்கன் பிரைய்தேவை:அஜினோ மோட்டோ சால்ட் – 1/4 தேக்கரண்டிவெடக்கோழி – 1சோயா சாஸ் – 1 கப்வினிகர் – 1/2 கப்நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டிஉப்பு, மஞ்சள் பெல்லாரி வெங்காயம் – 2மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்கார்ன்பிளவர் – 3 மேஜைக்கரண்டிமைதா – 2 மேஜைக்கரண்டிபொரிப்பதற்கு டால்டா
செய்முறை: கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், ஸாஸ், வினிகர் அஜினோமோட்டோ சால்ட், உப்பு. மஞ்சள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குக்கரில் அரை வேக்காடு வேக வைக்கவும். பின் கார்ன் பிளவரையும் மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து வாணலியில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s