மீன் கிரீன் வறுவல்

தேவையான பொருட்கள்:
மீன் (வஞ்சிரம்) – அரை கிலோ
பச்சை மிளகாய் – 10
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கொத்து
தயிர் – 1 டீஸ்பூன்
உப்பு – முக்கால் டீஸ்பூன்
கடலை மாவு – 5 டீஸ்பூன்
செய்முறை: மேற்கூறிய பொருட்கள் கலந்த கலவையை மீனில் பிசறி, ஒரு மணி நேரம் ஊற விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணையில் பொரிக்க வேண்டாம் என்றால், கடலை மாவுக்கு பதில் 3 டீஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து மீனில் பிசறி 2 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி பிசறி வைக்கவும். 8 வாழை இலை எடுத்து 4 வாழை இலை அடுக்கி ஊறவிட்ட மீனை வைத்து 4 இலை நன்றாக மூடி, நன்றாக சூடான கடாயில் வாழை இலை மீனை வைத்து மூடி சிறு தீயில் 3 இவை நன்றாக கருகிய பிறகு, அடுத்த பக்கம் பிரட்டி போட்டு மூடி 3 இலை கறுகியதும், எடுத்து நன்றாக கருகிய இலையை சுத்தம் செய்து எடுத்தால் மீன் நன்றாக வெந்து ஊறிப்போய் இருக்கும். (குறிப்பு: 3 இலை கருகும் வரைக்கும் தான் தீயில் வைக்க வேண்டும். 4 இலை கருகும் வரைக்கும் வைத்தால் மீன் தீய்ந்து விடும். இலை கருகிய பிறகு ஒரு பிளேட்டில் கடாயில் இருந்து எடுத்து. அந்த பிளேட்டை கடாயில் கவிழ்ந்தால் மேல் இலை கீழே வந்துவிடும்.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s