காளான் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:-
காளான் – 250 கிராம்
கடலை மாவு – 200 கிராம்
சோம்புத் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – 250 மி.லி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:-
காளான்களைக் கழுவித் தண்ணீரை வடிய விட வேண்டும். கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து சோம்புத்தூள், பெருங்காயம், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒவ்வொரு காளானாகக் கடலை மாவில் தோய்த்தெடுத்துக் காய்ந்த எண்ணெய் விட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.

Leave a comment