தேவை:
கோதுமை மாவு – 250 கிராம்
காரட் – 200 கிராம்
கறிவேப்பிலை, மல்லிதழை – சிறிதளவு
பீட்ரூட் – 100 கிராம்
சீமை வெங்காயம் – 200 கிராம்
உப்பு, கறிமசால், மிளகாய்தூள் – சிறிதளவு
செய்முறை:
காரட், பீட்ரூட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் துருவிய காரட், பீட்ரூட், உப்பு, மிளகாய்தூள் (தேவைக்கேற்ப) கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு, சப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Advertisement

