தேவை:
பீட்ரூட் – 1/4 கிலோ
பெ. வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 1
எலுமிச்சம் பழம் – பாதி
புதினா – சிறிதளவு
கிரீம் – 1/2 கப்
மிளகு தூள் – தேவையான
துஉப்பு – தேவையான
துஎண்ணெய் – தாளிக்க
செய்முறை:
பீட்ரூட் உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைக்கவும். பெ. வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து வேக வைத்து கொள்ளவும். இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் மிளகு தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்க்கவும். சூப் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கிரீம் புதினா சேர்த்து பருகவும்.
Advertisement

